News February 22, 2026

மயிலாடுதுறை: பெண் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

image

சீர்காழி அருகே ஆர்ப்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் பாண்டிச்சேரி மதுபானம் விற்பனை செய்த ராஜகுமாரி (60) என்பவரை போலீசார் கடந்த 1-ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் இவர் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.

Similar News

News February 26, 2026

மயிலாடுதுறையில் நாளை தொடங்குகிறது புத்தகத் திருவிழா!

image

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்ககம் சார்பில், மயிலாடுதுறை 4வது புத்தகத் திருவிழா நாளை(பிப்.27) தொடங்குகிறது. தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த புத்தக திருவிழா மார்.8 ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இதனை நாளை கலெக்டர் தலைமையில் அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தொடங்கி வைக்க உள்ளார்.

News February 26, 2026

மயிலாடுதுறை: தேதி மாற்றம் – ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(பிப்.26) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில், அரசு சார்ந்த நிர்வாக காரணங்களால் நாளை நடைபெற இருந்த கூட்டம் மார்ச் 3-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News February 26, 2026

விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு : ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (பிப்.26) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு சார்ந்த நிர்வாக காரணங்களால் நாளை நடைபெற இருந்த கூட்டம் மார்ச் 3-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!