News November 25, 2025
மயிலாடுதுறை: பூட்டை உடைத்து திருட்டு!

மாப்படுகையைச் சேர்ந்தவர் குணசேகரன் (57). இவர் குடும்பத்துடன் கடந்த 21-ந்தேதி காரைக்குடி சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 9 பவுன், 2 கிராம் நகைகள் மற்றும் வெள்ளி காணாமல் போயிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த குணசேகரன் இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
மயிலாடுதுறை: 100-வது ஆண்டு தொடக்க விழா

மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் பாதையின் 100-வது ஆண்டு தொடக்க விழா, மயிலாடுதுறை ஜங்ஷனில் கொண்டாடப்பட்டது. இதில் விவசாய சங்க தலைவர் ஆறுபாதி கல்யாணம், வக்கீல் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நிறுத்தப்பட்ட ரயில் சேவையை, அகலப்பாதையாக்கி மீண்டும் தரங்கம்பாடிக்கு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
News November 26, 2025
மயிலாடுதுறை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

மயிலாடுதுறை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
மயிலாடுதுறை: சிறப்பு கல்வி கடன் முகாம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வங்கிகள் சார்பில் நவ.26 இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. கல்வி கடன் பெற விரும்பும் மாணவ மாணவிகள் அனைவரும் http://pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து முகாமில் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


