News February 23, 2026
மயிலாடுதுறை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா?

மயிலாடுதுறை மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
Similar News
News February 25, 2026
மயிலாடுதுறை: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம்!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News February 25, 2026
மயிலாடுதுறை: ரூ.38,666 சம்பளத்தில் வங்கி வேலை

பெடரல் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு அசோசியேட் ஆபீசர் (Associate Officer – Sales) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. சம்பளம்: ரூ.38,666- ரூ. 55,833
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 21-27
6. கடைசி தேதி: 04.03.2026
7.விண்ணப்பிக்க:<
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News February 25, 2026
மயிலாடுதுறை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்


