News April 16, 2024
மயிலாடுதுறை: பிரதமர் மீது கடும் தாக்கு

மயிலாடுதுறையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி நேற்று சிறப்புரையாற்றினார். அப்போது இந்தியா கூட்டணியின் நோக்கம் நல்லாட்சியை தருவது என்றும் , பிரதமர் மோடி சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பதில்லை என விமர்சித்தார். மேலும் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்பவர்களின் , உலக மகா ஊழலாக தேர்தல் பத்திர முறைகேடு அமைந்திருக்கிறது என தெரிவித்தார்.
Similar News
News April 16, 2025
நியாய விலை கடையில் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு

சீர்காழி வட்டம் காவிரிபூம்பட்டினம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையினை தமிழக முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று பார்வையிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமை பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். மேலும் அங்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்தும் பார்வையிட்டார்.
News April 16, 2025
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான ஆய்வுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலநிலை மாற்றத்திற்கான விவசாய உத்திகள் குறித்த விவசாயிகளுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர் தலைமையில் நேற்று நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விவசாய உத்திகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்று பயன்பெற்றனர்.
News April 16, 2025
மயிலாடுதுறை: ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்.