News October 20, 2025
மயிலாடுதுறை: பாதுகாப்பு பணியில் 474 போலீசார்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தீபாவளியையொட்டி 474 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றங்கள் குறித்தும் வெடி விபத்து குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சீருடையில் போலீசார் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இதைப்போல சாதாரண உடையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 20, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை முக்கிய அறிவிப்பு

மாவட்ட காவல் துறை தீபாவளியொட்டி செய்தி வெளியிடுட்டுள்ளது. இதில் வெடிக்காத பட்டாசுகளை கையால் தொடுவதோ, அதை ஒன்று சேர்த்து கொளுத்துவது அறவே கூடாது. கையில் பட்டாசை பற்ற வைத்து துாக்கி எறிவது தீ விபத்துக்கு முக்கிய காரணம். மேலும் அதிகம் புகை கக்கும் மத்தாப்புகளை கொளுத்தும் போது, அதிலிருந்து வெளிவரும் புகை, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும் எனவே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
News October 20, 2025
மயிலாடுதுறை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை!

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் bankofbaroda.bank.in எனும் இணையதளத்தில் வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT
News October 20, 2025
மயிலாடுதுறை: பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு

தீபாவளி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் உங்கள் அப்பகுதியில் ஏதேனும் தீ விபத்துகள் ஏற்பட்டாலோ அல்லது அவசர உதவிகள் தேவைப்பட்டாலோ நீங்கள் தொடபு கொள்ளவேண்டிய எண்கள். 1)தீயணைப்பு நிலையம்,குத்தாலம்-04364234101, 2)தீயணைப்பு நிலையம், மணல்மேடு-04364254101, 3)தீயணைப்புநிலையம்,சீர்காழி-04364270101, 4)தீயணைப்பு நிலையம், மயிலாடுதுறை-04364222101 ஆகிய எண்களை தொரபு கொள்ளலாம். தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க