News December 31, 2024
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி இன்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்து நிலையம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா, பேருந்து நிலையத்தில் குப்பைகள் அகற்றப்படுகிறதா என்றும், பொதுக்கழிப்பறை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார். இதில் நகராட்சி ஆணையர் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News November 7, 2025
மயிலாடுதுறை: திருமணத்திற்கு தங்கம் வேண்டுமா?

மயிலாடுதுறை மாவட்ட மக்களே! ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2) இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 3) திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். 4) திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News November 7, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2112 பேருக்கு தேர்வு!

டிஎன்யுஎஸ்ஆர்பி நடத்தும் இரண்டாம் நிலை காவலர் தேர்வு வருகிற 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 1542 ஆண்கள் மற்றும் 570 பெண்கள் என மொத்தம் 2112 பேர் தேர்வு எழுத உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏவிசி கலைக்கல்லூரியில் ஆண் விண்ணப்பதாரர்கள் மற்றும் ஏவிசி பொறியியல் கல்லூரியில் பெண் விண்ணப்பதாரர்கள் என இரண்டு தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
News November 7, 2025
மயிலாடுதுறை: இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.7) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!


