News November 20, 2025

மயிலாடுதுறை: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல் !

image

மயிலாடுதுறை மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

Similar News

News November 26, 2025

மயிலாடுதுறை: பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

News November 26, 2025

JUST IN மயிலாடுதுறை: மிக கனமழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.28 & நவ.29 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!

News November 26, 2025

மயிலாடுதுறையில் SIR பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மயிலாடுதுறை நகராட்சி கேனிக்கரை பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஒன்றாக வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் திரும்பப்பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். படிவங்களை விரைந்து பெற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா உடன் பங்கேற்றார்.

error: Content is protected !!