News September 23, 2025

மயிலாடுதுறை: நேர்காணல் ஒத்திவைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் 27.9.2025 மற்றும் 29.9.2025 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த கிராம உதவியாளர் பணி இடங்களுக்கான நேர்காணல் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என குத்தாலம் வருவாய் வட்டாட்சியர் தெரிவித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் செய்தி வெளியிட்டுள்ளார்.

Similar News

News September 23, 2025

மயிலாடுதுறை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

மயிலாடுதுறையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News September 23, 2025

மயிலாடுதுறை: கொலை வழக்கில் 6 பேர் கைது

image

மயிலாடுதுறை, ஆணைக்காரன் சத்திரம் பெரிய குத்தவக்கரையை சேர்ந்த லட்சுமணன் (35) என்பவர் கடந்த 20ஆம் தேதி தகாத உறவால் உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலை குற்றத்தில் ஈடுபட்ட ராகுல் (32), அருண் ராமன் (30), பிரேம்நாத் (25), ஏழுமலை (20), சேகர் (65) மற்றும் இளம்பிழையாளி (17) ஆகியோர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்

News September 23, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், குழந்தை திருமணங்களை தடுக்கவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குழந்தைகள் பாதுகாப்பிற்கும் 1098 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!