News October 4, 2025
மயிலாடுதுறை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது மயிலாடுதுறை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். ஷேர் பண்ணுங்க
Similar News
News October 4, 2025
மயிலாடுதுறை: மனுக்களை பெரும் குறைதீர்ப்பு வாகனம்

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வானகிரி, மேலையூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் நம்ம பூம்புகார், நம்ம MLA என வாகனத்தில் மூலம் மக்கள் குறைதீர்ப்பு வாகனம் சென்று களத்தில் உள்ள பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று உடனடி தீர்வு மேற் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
News October 4, 2025
மயிலாடுதுறை: மின்நிறுத்தம் ஒத்திவைப்பு

திருவெண்காடு துணை மின் நிலையத்தின் இன்று நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் திட்டமிட்டிருந்த காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் நடைபெறாது. பராமரிப்பு பணிகளுக்கான புதிய தேதி பின்னர் மின்வாரியத்தால் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 4, 2025
மயிலாடுதுறை: போக்குவரத்து மாற்றம்

மயிலாடுதுறை-பூம்புகார் கல்லணை சாலையில் மாப்படுகை ரயில்கேகேட் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் 50 ஆண்டுகளை கடந்த சாரங்கபாணி நினைவு மேம்பாலம் கடந்த 2 ஆண்டுகளாக புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மேம்பாலத்தில் மேல்தளபகுதியில் பராமரிப்பு பணிகள் இன்று முதல் தொடங்கப்படவுள்ளதால் போக்குவரத்து தடை செய்ய திட்டமிப்பட்டு போக்குவரத்து இன்று தடைசெய்யப்பட்டது