News December 22, 2025
மயிலாடுதுறை: நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கல்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்து உலமாக்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை வழங்கினார். இவ்வாரியம் சார்பில் திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்தினால் உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
Similar News
News December 22, 2025
மயிலாடுதுறை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) உள்ள 764 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-28
3. சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400
4. கல்வித் தகுதி: DEGREE / ITI / DIPLOMA
5. கடைசி தேதி: 01.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
7. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க
News December 22, 2025
மயிலாடுதுறை: போலீஸ் அடித்தால் எப்படி புகார் அளிப்பது ?

உங்கள் மீது எந்த தவறும் இல்லாமல் போலீசார் உங்களை அடித்தால், அவர் மீது மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் செயல்படும் Police Complaint Authority-இல் ஆதாரங்களுடன் நீங்கள் புகார் அளிக்கலாம். அதில் பயன் கிடைக்காத பட்சத்தில், hrcnet.nic.in என்ற இணையதளம் மூலமாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் உங்களால் புகார் அளிக்க முடியும். இதன் மூலம் கோர்ட்-கேஸ் என்ற அலைச்சல் இல்லாமல் உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். ஷேர்
News December 22, 2025
மயிலாடுதுறையில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்!

திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு சஷ்டியப்த பூர்த்தி பீமரத சாந்தி சதாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்படுகின்றன. பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு மலேசியா நாட்டை சேர்ந்த 44 பேர் குடும்பத்துடன் நேற்று சாமி தரிசனம் செய்தனர். இதில் 5 தம்பதிகள் 60 வயது பூர்த்தி அடைவதை முன்னிட்டு சஷ்டியப்த பூர்த்தி ஹோமம் செய்து வழிபட்டனர்.


