News January 26, 2026

மயிலாடுதுறை: நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டம் சாய் விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 77வது குடியரசு தின விழா மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 310 பயனாளிகளுக்கு ₹95 லட்சத்து 12 ஆயிரத்து 629 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Similar News

News January 27, 2026

மயிலாடுதுறை: திருமண தடையா? கவலை வேண்டாம்!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொழிக்குத்தி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜோதி வானமுட்டி பெருமாள் திருக்கோயில் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான வானமுட்டி பெருமாளுக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News January 27, 2026

மயிலாடுதுறை: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

மயிலாடுதுறை மக்களே, கலைஞர் உரிமை தொகை ரூ.1000 வரலையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாட்களுக்குள் முறையான தீர்வு கிடைக்கும். SHARE IT.

News January 27, 2026

மயிலாடுதுறை: தமிழ் தெரியுமா? வங்கியில் வேலை!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் செய்து <<>>பிப். 4க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!