News October 24, 2024

மயிலாடுதுறை நகராட்சி சார்பில் அறிவிப்பு

image

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சொத்து உரிமை தாரர்கள் 2024 – 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை வருகின்ற அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென மயிலாடுதுறை நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சொத்துவரி கேட்பில் ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை பெற்று பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 14, 2025

மயிலாடுதுறை: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு வேண்டுமா?

image

மயிலாடுதுறை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்பத்தாரின் விபரத்தோடு மருத்துவ அடையாள அட்டையை உடனே பதிவு செய்து பெற முடியும். மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம். SHARE IT NOW

News August 14, 2025

விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வல ஆலோசனை கூட்டம்

image

சீர்காழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தொடர்பான ஆலோசனை கூட்டம் காவல் துறை சார்பில் இன்று நடைபெற்றது. டி.எஸ்.பி அண்ணாதுரை தலைமையில் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் ராஜா அண்ணாதுரை சுகுணா விஜயா முன்னிலை வகித்தனர். விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.வைத்தீஸ்வரன் கோயில் எஸ்ஐ சூரியமூர்த்தி விழா கமிட்டி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்

News August 14, 2025

மயிலாடுதுறை: VAO லஞ்சம் கேட்கிறாரா? இத பண்ணுங்க!

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் 04364-299952 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!