News September 3, 2025

மயிலாடுதுறை: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்!

image

மயிலாடுதுறை, சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு. தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஆடையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய பெரும் உதவியாக இத்திட்டம் இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க மயிலாடுதுறை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகவும். SHARE பண்ணுங்க.

Similar News

News September 4, 2025

வேளாண் பொறியியல் பட்டய படிப்புக்கான அறிவிப்பு

image

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் பட்டய படிப்புகளில் சேர பல்வேறு மாவட்ட வேளாண்மை கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளன. வேளாண்மை தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டய படிப்புகளில் சேர ஆர்வமுள்ள 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் http://tnau.ucanapply.ac.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News September 4, 2025

மயிலாடுதுறை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற செப்.12-ந் தேதி நடக்கிறது. மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கச்சேரி சாலையிலுள்ள யூனியன் கிளப் வளாகத்தில் காலை 9 மணி முதல் 3 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை தேடுபவர்கள் தங்களது சுய விவரங்களை <>www.tnprivatejobs.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். ஷேர் பண்ணுங்க!

News September 4, 2025

மயிலாடுதுறை: 113 மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் உதவி

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற்றது. முகாமில் சுமார் 113 மாணவ மாணவிகளுக்கு மொத்தம் 4.72 கோடி மதிப்பிலான உயர்கல்வி கடன் வழங்கப்படுகிறது. முகாமில் பொறியியல் படிப்பு பயில 57 மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பிற்கு 17 பேருக்கும் அறிவியல் படிப்புக்கு 24 பேருக்கும் செவிலியர் படிப்புக்கு 11 பேருக்கும் இதர படிப்புகளுக்கு 4 மாணவர்களுக்கும் கடன் வழங்கப்பட்டது.

error: Content is protected !!