News March 22, 2024
மயிலாடுதுறை தேர்தல் அலுவலர் தகவல்

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இதுவரை 3704 சுவர் விளம்பரங்களும், 6864 சுவரொட்டிகளும், 1174 பதாகைகளும், 751 இதர விளம்பரங்களும் அகற்றப்பட்டு, 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News October 16, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் இரவு முதல், காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 15, 2025
மயிலாடுதுறை: உணவுத் தொழிற்சாலையில் ஆய்வு

மயிலாடுதுறை வட்டம் குளிச்சார் கிராமம் சிட்கோ தொழிற்பேட்டையில், மாவட்ட தொழில் மையம் மூலம் வங்கி கடனுதவி பெற்று இயங்கும் உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனத்தை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பார்வையிட்டார். தொழில் வளர்ச்சி நிலையை ஆய்வு செய்து, திட்டத்தின் பயன்கள் குறித்து தொழில் முனைவோரிடம் கேட்டறிந்தார்.
News October 15, 2025
மயிலாடுதுறை: டிகிரி போதும்..அரசு வேலை!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி : Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.