News December 15, 2025

மயிலாடுதுறை: தீர்த்தவாரியில் திரண்ட பொதுமக்கள்

image

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் நேற்று கார்த்திகை கடைசி ஞாயிறு கடை முக தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக குத்தாலம் பகுதியில் உள்ள 6 கோயில்களை சேர்ந்த சுவாமி அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி காவிரி தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News December 17, 2025

மயிலாடுதுறையில் சிறப்பு லோன் மேளா

image

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின்(TAMCO) மூலம் வழங்கப்படும் பல்வேறு கடன் திட்டங்களுக்கான சிறப்பு லோன் மேளா வருகிற வெள்ளிக்கிழமை டிசம்பர் 19 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தனிநபர் கடன் சுய உதவி குழுக்களுக்கான கடன் கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் சீக்கியர்கள் புத்த மதத்தினர் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்

News December 17, 2025

மயிலாடுதுறை: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <>tnagrisnet.tn.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News December 17, 2025

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஆய்வு

image

மயிலாடுதுறை வட்டம் சித்தர்காடு பகுதியில் உள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் உள்ள, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திறக்கப்பட்டு, முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியர் ஸ்ரீகாந்த், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் தனி வட்டாட்சியர் முருகேசன் உடன் இருந்தார்

error: Content is protected !!