News January 10, 2026
மயிலாடுதுறை: தீராத நோயையும் தீர்க்கும் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம், திருப்புன்கூர் கிரமத்தில் சிவலோகநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோவிலில் உள்ள சிவலோநாநதரை வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள், தீராத நோய்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இதை மறக்காமல் SHARE பண்ணுங்க…
Similar News
News January 11, 2026
மயிலாடுதுறை: மகளுக்கு பாலியல் தொல்லை – தந்தை கைது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பகுதியை சேர்ந்த 34 வயதான கட்டிடத் தொழிலாளி, அவரது மகளான 9 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 11, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பயண அட்டை பெறுவதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி வரை முகாம் நடைபெறுகிறது. அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முகாம் நடைபெறும். எனவே, மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News January 11, 2026
மயிலாடுதுறை: ஓட்டுநர் துடிதுடித்து பலி

சீர்காழியில் இருந்து கொள்ளிடம் செல்லும் புறவழிச் சாலையில் சாமியம் பகுதியில் சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த வேன், சீர்காழியிலிருந்து இரண்டு மிக்சர் மிஷின்களுடன் சென்ற டிராக்டர் பின்னால் மோதியது. இதில், வேன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத டிரைவர் முகமது யாசின்(34), வேனில் இருந்து குதித்தபோது வேனின் முன் சக்கரம் ஏறி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


