News March 28, 2025
மயிலாடுதுறை: திருநீறு பட்டையுடன் அருள்புரியும் ஆஞ்சநேயர்

மயிலாடுதுறையிலிருந்து 13 கி.மீ தொலைவில் திருக்குரக்காவல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குண்டலகர்ணேஸ்வரர் கோயிலில் ருத்ராட்ச மாலை அணிந்து சிவபக்த ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். சிவஅபராதம் நீங்க ஆஞ்சநேயர் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். தொழில் அபிவிருத்தி ஸ்தலமாக விளங்கும் இங்கு அமாவாசை தினங்களில் ஆஞ்சநேயருக்கு ஹோம பூஜைகள் நடைபெறுகிறது! உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
Similar News
News November 14, 2025
மயிலாடுதுறை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
மயிலாடுதுறை ரயில் சேவை வழித்தடம் மாற்றம்

மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் நவம்பர் 1, 8,11,15,18 உள்ளிட்ட தேதிகளில் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் மதுரை, திண்டுக்கல் வழிக்கு பதிலாக காரைக்குடி, மானாமதுரை வழியாக செங்கோட்டை செல்லும். செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை வரும் ரயில் நவம்பர் 5, 12, 19, 26 புதன்கிழமைகளில் மட்டும் மதுரை திண்டுக்கல் மணப்பாறை வழியாக மயிலாடுதுறை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
மயிலாடுதுறை: இஸ்ரோவில் வேலை-இன்றே கடைசி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: இன்று (14.11.2025)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


