News April 12, 2025
மயிலாடுதுறை: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
Similar News
News April 14, 2025
கொள்ளிடம் கோயிலில் காவல்துறை மண்டகப்படி-எஸ்.பி. பங்கேற்பு

கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வருடந்தோறும் உற்சவத்தின் 11ஆம் நாள் கொள்ளிடம் ஆணைகாரன்சத்திரம் காவல் நிலையம் சார்பில் மண்டகப்படி விழா நடைபெறும் அதன்படி இன்று கொள்ளிடம் காவலர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் சீர்வரிசை எடுத்து கோவிலுக்கு வந்தனர். மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் ராஜா போலீசார் பொதுமக்கள் விழாவில்பங்கேற்றனர்.
News April 14, 2025
நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் அமல்

மயிலாடுதுறையில் இந்தாண்டு மீன்பிடி தடைகாலம் நாளை (14ம் தேதி) நள்ளிரவு முதல் ஜூன் 14ம் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது. அதன்படி பூம்புகார், கொள்ளிடம், சீர்காழி, தரங்கம்பாடியில் 1,500 விசைப்படகுகளில் 20,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.நாளை முதல் மீனவதொழிலாளர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலையிழப்பர். தடைகால மீனவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.8000 வழங்குவது குறிப்பிடத்தக்கது.
News April 13, 2025
தேசிய அளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்ற சீர்காழி மாணவி

சீர்காழி ஊழியக்காரன் தோப்பு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் சுபாஷினி என்கிற மாணவி நடப்பு கல்வி ஆண்டில் தேசிய அளவில் நடத்தப்பட்ட தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வில் 97 மதிப்பெண்கள் எடுத்து உதவித்தொகைக்கு தேர்வு பெற்றுள்ளார். தேர்வில் சிறந்து விளங்கியதற்காக மாணவிக்கு ஆசிரியர்கள், சக மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.