News September 29, 2025
மயிலாடுதுறை: தலைக்குப்புற கவிழ்ந்த லாரி

மயிலாடுதுறை, கொள்ளிடத்தில் இருந்து தில்லைமங்கலம் கிராமத்திற்கு நேற்று வீடு கட்டுவதற்கான கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி ஒன்று சாலை ஓரம் வயலில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர் எந்த பாதிப்புமின்றி உயிர் தப்பினார். இதையடுத்து தகவலறிந்த ஆனைக்காரன் சத்திரம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News December 11, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துறை தேர்வுகள் கணினி வகையிலான தேர்வுகள் வருகிற 15.12.2025 முதல் 19.12.2025 வரை மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. தேர்வு எழுதுபவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது. தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்
News December 11, 2025
மயிலாடுதுறை: ஐம்பொன் சிலைகள் மீட்பு

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் காவல் சரகத்தில் உள்ள கோவிலின் கதவை உடைத்து ஐம்பொன் சிலை மற்றும் பித்தளை பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இதையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மயிலாடுதுறையை சேர்ந்த ராஜசேகரன் 20, முகமது அலி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஐம்பொன் சிலை மற்றும் பித்தளை பொருட்களை மீட்டனர்.