News August 17, 2025

மயிலாடுதுறை – தரங்கம்பாடியின் ரயில் சேவை!

image

மயிலாடுதுறை-தரங்கம்பாடி மீட்டர் கேஜ் ரயில் பாதை, பிரிட்டிஷ் அரசால் 1926-யில் திறக்கப்பட்டது. 36 கிமீ நீளம் கொண்ட இப்பாதை செம்பனார்கோயில், திருக்கடையூர், பொறையார் வழியாக சென்றது. இதன் மூலம் பொதுமக்கள் பெரிதும் பயன்பெற்று வந்தனர். ஆனால் வருவாய் குறைவின் காரணமாக 1986ம் ஆண்டு இந்த சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த சேவையை மீண்டும் தொடங்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதை ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 18, 2025

மயிலாடுதுறை: கடையில் தீ விபத்து: ஆறுதல் கூறிய எம்எல்ஏ

image

மயிலாடுதுறை மகாதான வீதியில் நேற்று தனியார் டைலர் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய நிவேதா எம் முருகன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவருக்குஅறிதல் கூறினார். உடன் மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் என் செல்வராஜ் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News August 17, 2025

மயிலாடுதுறை: LIC நிறுவனத்தில் வேலை! ரூ.88,000 சம்பளம்!

image

மயிலாடுதுறை மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிகுள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 17, 2025

தென்பாதி மகா மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

image

சீர்காழி தென்பாதியில் உள்ள சாலைகரையாள் எனும் மகாமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நேற்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்களை வைத்து அபிராமி அந்தாதி தேவார பாராயணம் செய்து 108 போற்றி மந்திரங்கள் உச்சாடனம் செய்து திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.

error: Content is protected !!