News October 15, 2025

மயிலாடுதுறை: டிகிரி போதும்..அரசு வேலை!

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி : Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே <<>>CLICK செய்க.
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News October 15, 2025

மயிலாடுதுறைக்கு ஆரஞ்சு அலெர்ட்!

image

தமிழகத்தில் நாளை (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (அக்.15) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News October 15, 2025

மயிலாடுதுறையில் போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி

image

பொதுமக்களிடையே போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் உதவி ஆணையர் மாணிக்கராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முத்துவடிவேல் மற்றும் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News October 15, 2025

மயிலாடுதுறை: முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் கடைமடை பகுதியாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் புது மண்ணியாறு, தெற்குராஜன் வாய்க்கால், பொறை வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களும், நூற்றுக்கணக்கான கிளை வாய்க்கால்களும் உள்ளன. வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாய்க்கால் கரைகளில் உடைப்பை சரி செய்ய மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணியில் நீர்வளத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!