News August 7, 2025
மயிலாடுதுறை: டிகிரி போதும்.. உதவியாளர் வேலை

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள்<
Similar News
News August 7, 2025
ஒன்றிய அமைச்சரை சந்தித்த மயிலாடுதுறை எம்பி

மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா இன்று டெல்லியில் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவை சந்தித்து, மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி சார்ந்த ரயில்வே பணிகள் குறித்த கோரிக்கை மனுவை வழங்கினார். அதில் பகல் நேரத்தில் மயிலாடுதுறை இருந்து சென்னை வரை சேர் கார், தரங்கம்பாடி அகல ரயில் பாதை திட்டம், சென்னையில் இருந்து நவகிரக ரயில், போன்றவை குறிப்பிடத்தக்கது.
News August 7, 2025
பள்ளியில் வகுப்பறை திறந்து வைத்த முன்னாள் மாணவர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் பள்ளியின் முன்னாள் மாணவரும், சீர்காழி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாலசுப்பிரமணியன் வகுப்பறையை திறந்து வைத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு அளித்தார். இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
News August 7, 2025
மைசூர் செல்லும் ரயில் சேவையில் மாற்றம்

கடலூரில் மதியம் 3.40 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு வழியாக மைசூர் செல்லும் ரயில் (16231) வரும் ஆக.,20ஆம் தேதி மட்டும் ஒரு மணிநேரம் தாமதமாக கடலூரில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக மைசூர் செல்லும் என பொதுமக்களுக்கு தென்னிந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.