News September 4, 2025
மயிலாடுதுறை: டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
Similar News
News April 8, 2026
மாயவரம்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அவ்வகையில், வேலை தேடும் இளைஞர்கள் பகுதி நேர வேலை வாய்ப்பு என உங்களது அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இதன் மூலம் உங்களிடம் இருந்து பணம் பறிக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News April 8, 2026
மாயவரம்: 32 பேர் வேட்புமனு நிராகரிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி உள்ளிட்ட தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். கடந்த 6ஆம் தேதி மாலை 3 அளவில் வேட்பு மனுதாக்கல் நிறைவந்த நிலையில் நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில் ராமதாஸ் அணி பாமக வேட்பாளர் சக்திவேல் உட்பட 32 மனு நிராகரிக்கப்பட்டது.
News April 8, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்.7) இரவு 10 முதல், இன்று (ஏப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


