News March 13, 2026
மயிலாடுதுறை: சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்படவில்லை என எழுந்த புகார்களை தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்து முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News April 6, 2026
மாயவரம்: வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். அதன்படி பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை பொது இடங்களில் நிறுத்தி செல்லும்போது, அதில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பைக் டேங்க் கவர்களில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வைத்து செல்ல வேண்டாம். அவற்றை மற்றவர்கள் திருடி செல்ல வாய்ப்புள்ளதால் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர்
News April 6, 2026
மாயவரம்: ரூ.62,300 பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை

சீர்காழி அருகே செம்மங்குடி – திருக்கருகாவூர் சாலையில் பறக்கும் படை அலுவலர் பாலமுருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கை சோதனை செய்ததில், ராதாநல்லூரைச் சேர்ந்த விஷ்ணுகுமார் என்பவர், ரூ.64,300 உரிய ஆவணமின்றி எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனையெடுத்து பணத்தை முறிதல் செய்த பறக்கும் படையினர், சீர்காழி மண்ட தாசில்தார் பாபுவிடம் ஒப்படைத்தனர்.
News April 6, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (ஏப்.5) இரவு 10 முதல், இன்று (ஏப்.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


