News April 7, 2024
மயிலாடுதுறை: சிதம்பரத்தில் முதல்வர்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சுதா சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் தொல் திருமாவளவன் ஆகியோரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Similar News
News August 5, 2025
மயிலாடுதுறை: இப்படி ஒரு பெயர்களா?

மயிலாடுதுறை மாவட்டம் பல வரலாற்று சிறப்புகளை கொண்டுள்ளது. அவ்வாறு உள்ள இம்மாவட்டத்தின் முக்கிய ஊர்கள் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை காண்போம். மயிலாடுதுறை – மாயவரம், பூம்புகார் – காவிரிப்பூம்பட்டினம், தரங்கம்பாடி – ட்ரான்கேபார், சீர்காழி – பிரம்மபுரம், குத்தாலம் – திருத்துருத்தி, செம்பனார்கோவில் – இந்திரபுரி, மணல்மேடு – நாகநாதபுரம் என அழைக்கப்பட்டது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News August 4, 2025
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த பணிக்கு விண்ணப்பம்

தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு மிஷன் வத்சல்யா திட்டத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப படிவம் விளக்கக் குறிப்புகளை http://mayiladuthurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 11, 2025
மயிலாடுதுறை கலெக்டர் எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் 130 இடங்களில் நடைபெற உள்ள “உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்களில் மட்டுமே இரண்டாம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான படிவங்கள் வழங்கப்படும். தனியார் கடைகளிலும், வணிக நிறுவனங்களிலும் போலியாக விற்கப்படும் விண்ணப்பங்களை வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.