News September 6, 2025
மயிலாடுதுறை: கோழிப்பண்ணை அமைக்க மானியம்

மயிலாடுதுறை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 8, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விவரங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மயிலாடுதுறை குத்தாலம் மணல்மேடு பொறையார் செம்பனார்கோயில் சீர்காழி திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசாரின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குற்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
News September 8, 2025
சீர்காழியில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு

சீர்காழி தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு 6 இடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த பணிக்கான தேர்வு சீர்காழி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. சீர்காழி கோட்டாட்சியர் சுரேஷ் வட்டாட்சியர் அருள்ஜோதி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஹரிஹரன் மேற்பார்வையில் 6 பணியிடங்களுக்கு 314 தேர்வர்கள் தேர்வு எழுதினர். 89 பேர் தேர்வு எழுத வரவில்லை.
News September 7, 2025
மயிலாடுதுறை: பெல் நிறுவனத்தில் வேலை

திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 760 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ, ITI, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <