News October 18, 2025
மயிலாடுதுறை: கொலை வழக்கில் 4 பேர் மீது குண்டாஸ்

மயிலாடுதுறையில் இரு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அடியமங்கலம் பகுதியில் காதல் முன்விரோதத்தால் வைரமுத்துவை கொன்ற குகன், அன்புநிதி ஆகியோர், மேலும் கொள்ளிடம் பகுதியில் லட்சுமணனை கொன்ற ராகுல், ராஜா (எ) ராமசந்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News October 18, 2025
மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா நெல் சிறப்பு பருவ பயிருக்கு காப்பீட்டை நவம்பர் 15-ந் தேதிக்குள் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) அல்லது www.pmfby.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News October 18, 2025
மயிலாடுதுறை மக்களே உஷாரா இருங்க!

தீபாவளி பண்டிகையானது வரும் அக்.20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தற்போது பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி, ஆஃபர் உள்ளதாக போலியான லிங்குகள் மூலமாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் உஷாராக இருக்கும்படியும், ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
News October 18, 2025
மயிலாடுதுறை: B.E போதும், இஸ்ரோவில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: 14.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!