News July 7, 2025
மயிலாடுதுறை: குழந்தை பேறு அருளும் திருவலங்காடு திருத்தலம்

மயிலாடுதுறை, திருவாலங்காடு கிரமத்தில் வண்டார் குழலி அம்பிகை சமேத வடாரண்யேசுர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் தனிச்சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். நீண்ட நாள் குழந்தைபேறு வேண்டுவோர் அமாவாசையில் இங்கு சென்று புனித நீராடி புத்திரகாமேஸ்வரர் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சேர் பண்ணுங்க.!
Similar News
News July 8, 2025
தவாக நிர்வாகி கொலை வழக்கில் 11 பேர் சரணடைந்துள்ளனர்

செம்பனார்கோயில் அருகே தவாக நிர்வாகி மணிமாறனை வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அறிவாளால் வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட டிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய பிரபாகரன் வீரமணி குணசேகரன் முருகன் உள்ளிட்ட 4 பேர் பாலையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மேலும் 7 பேர் வளவனூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
News July 7, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட போலீசார் இன்று இரவு (ஜூலை 7) 11 மணி முதல் நாளை (ஜூலை 8) காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் காவல்துறை அதிகாரிகள் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள காவல் அதிகாரிகளின் நேரடி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
News July 7, 2025
இலவச தையல் இயந்திரங்கள் வழங்கிய ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், பயனாளிகளுக்கு ஆட்சியர் இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கீதா ஆகியோர் உடன் பங்கேற்றனர்.