News September 23, 2025
மயிலாடுதுறை: குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 265 மனுக்கள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகை புரிந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 265 மனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில் மனுக்களை கலெக்டர் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News September 23, 2025
மயிலாடுதுறை: வங்கி வாசலில் பைக் திருட்டு

மயிலாடுதுறை மகாராஜபுரம் ஆனந்தகுடியை சேர்ந்த கோமளவல்லி என்பவர் கூறைநாடு பகுதியில் தனது மொபட்டை நிறுத்திவிட்டு வங்கிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மொபட் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு மொபட்டை திருடிய பிரித்விராஜ் (19), பரசுராமன் (21), சாரதி (20) மகேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர்.
News September 23, 2025
மயிலாடுதுறை: B.E போதும்; ரூ.1.4 லட்சம் சம்பளம்

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரபப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இ<
News September 23, 2025
மயிலாடுதுறை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

மயிலாடுதுறையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.