News July 11, 2025
மயிலாடுதுறை: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

➡️மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை 15,880 பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!
Similar News
News July 11, 2025
குறுவை நெற்பயிருக்கு காப்பீடு செய்ய 31ஆம் தேதி கடைசி நாள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு குறுவை நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 31ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். பயிர் காப்பீட்டு தொகை ஏக்கருக்கு ரூ. 37 ஆயிரத்து 600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் 2 சதவீதம் என்ற விகிதத்தில் பிரீமியமாக ஏக்கருக்கு ரூ. 752 செலுத்த வேண்டும். எனவே உரிய ஆவணங்களுடன் காப்பீடு செய்து பயன்பெற ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News July 11, 2025
மயிலாடுதுறையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் அனைத்து நிலைகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மண்டல அளவிலான குறைதீர் கூட்டம் இன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 11, 2025
மயிலாடுதுறை: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (1/2)

தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் <