News December 30, 2025

மயிலாடுதுறை காவல் துறை சார்பில் விழிப்புணர்வு!

image

சமூகநீதி மற்றும் மனித உரிமைகளை வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் சார்பில் வெகுஜன விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் மணல்மேடு பட்டவர்த்தியில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில், சமூக நீதிக்கான விளக்கம், மனித உரிமையின் வகைகள், மனித உரிமை மீறல் மற்றும் அதற்கான தண்டனைகள், குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Similar News

News December 31, 2025

மயிலாடுதுறை மக்களே இந்த விஷயம் தெரியுமா?

image

மயிலாடுதுறை பாரம்பரிய நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக கூறைநாடு புடவை அல்லது கூறை பட்டு புடவைகள் இங்கு பிரபலமானவையாகும். இந்த சேலை திருமணம் மற்றும் மத சடங்குகளின் ஒரு தவிர்க்க முடியாத ஒன்றாக கருதப்படுகிறது. இது கலாச்சார சார்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த புடவைகள் சிறிய கட்டங்கள் கொண்ட வடிவமைப்புடன் அழகான தோற்றத்தில் காணப்படுகிறது. தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News December 31, 2025

மயிலாடுதுறை: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இத பண்ணுங்க!

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க!

News December 31, 2025

மயிலாடுதுறை: முக்கிய ஊர்களின் முற்கால பெயர்கள்

image

மயிலாடுதுறை மாவட்டம் பல வரலாறுகளை கொண்டுள்ளது. அவ்வாறு உள்ள மாவட்டத்தின் முக்கிய ஊர்கள் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை காண்போம். மயிலாடுதுறை – மாயவரம், செம்பனார்கோவில் – இந்திரபுரி, பூம்புகார் – காவிரிப்பூம்பட்டினம், சீர்காழி – பிரம்மபுரம், குத்தாலம் – திருத்துருத்தி, மணல்மேடு – நாகநாதபுரம், தரங்கம்பாடி – ட்ரான்கேபார் என அழைக்கப்பட்டது. தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!