News October 27, 2024

மயிலாடுதுறை காவலர் சாலை விபத்தில் உயிரிழப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக போலீஸ் கேன்டீனில் பணியாற்றி வருவபவர் காவலர் பரந்தாமன். இன்று மதியம் உணவு சாப்பிட சொந்த ஊரான எடகுடிக்கு டூவீலரில் சென்றவர் மீது சுந்தரப்பன்சாவடி அருகே அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே பரந்தாமன் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News February 8, 2026

மயிலாடுதுறை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

மயிலாடுதுறை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>https://voters.eci.gov.in/login என்ற இணையதளம் <<>>சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க

News February 8, 2026

மயிலாடுதுறை: இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

image

மயிலாடுதுறை மக்களே., அடிக்கடி வீட்டில் கரண்ட் மற்றும் வோல்டேஜ் பிரச்சனையா? இனி EB ஆபிஸை தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811 மற்றும் 9443111912 என்ற எண்களில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் SHARE செய்து உதவுங்க!

News February 8, 2026

மயிலாடுதுறை: போலீசார் அதிரடி – இளைஞர் கைது

image

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்தில் இன்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக பாண்டி மதுபானங்களை விற்பனை செய்த, கருவாழக்கரை மேலையூரை சேர்ந்த சின்ராசு (எ) ராதாகிருஷ்ணன்(29) எனவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பைக் மற்றும் 200 எண்ணிக்கையிலான பாண்டி மதுபான பாட்டில்களையும் போலீசார் கைப்பற்றினர்.

error: Content is protected !!