News April 3, 2024
மயிலாடுதுறை: கடலில் இறங்கி போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 500க்கும் மேற்பட்ட மக்கள் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். கீழமூவர்கரை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறப்படுகிறது. அவற்றை நிறைவேற்றி தரக்கோரி, தேர்தலை புறக்கணிப்பதாக கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News November 19, 2024
மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் நவம்பர் 29-ஆம் தேதி நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
விசிக தலைவருடன் திமுக நிர்வாகி சந்திப்பு
சீர்காழி அருகே மேலையூர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரான முத்து தேவேந்திரன் தனது இல்ல திருமண விழாவை முன்னிட்டு விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தார். அவருடன் ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News November 18, 2024
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மயிலாடுதுறை வட்ட அளவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் எதிர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி காலை 9 மணி முதல் நவம்பர் 21-ஆம் தேதி காலை 9 மணி வரை தங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை அந்தந்த கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.