News December 23, 2025
மயிலாடுதுறை: ஒரே நாளில் குவிந்த 427 மனுக்கள்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள மக்கள் வருகை தந்து ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 427 மனுக்கள் பெறப்பட்டன. இதையடுத்து மனுக்களை பெற்ற ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
Similar News
News December 25, 2025
மயிலாடுதுறை: காணாமல் போன ரயில் சேவை!

மயிலாடுதுறை – தரங்கம்பாடி மீட்டர் கேஜ் ரயில் பாதை பிரிட்டிஷ் அரசால் 1926-ல் திறக்கப்பட்டது. இது 36 கிமீ (22 மைல்) நீளம் கொண்டது. இந்த மீட்டர் கேஜ் ரயில் சேவை, திருக்கடையூர் வழியாக தரங்கம்பாடிக்கு சென்றது. இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் பயன்பெற்று வந்தனர். ஆனால் வருவாய் குறைவின் காரணமாக 1986-ம் ஆண்டு முதல் இந்த சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தெரியாதவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்!
News December 25, 2025
மயிலாடுதுறை மாவட்ட தீயணைப்பு நிலைய எண்கள்!

உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்துகள் ஏற்பட்டாலோ அல்லது அவசர உதவிகள் தேவைப்பட்டாலோ தயக்கமின்றி மயிலாடுதுறை மாவட்ட தீயணைப்புத் துறையின் அவசர எண்ணை அழைக்கலாம்.
1. குத்தாலம்-04364234101
2. மணல்மேடு-04364254101
3. சீர்காழி-04364270101
4. மயிலாடுதுறை-04364222101
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 25, 2025
மயிலாடுதுறையில் இப்படி ஒரு துறைமுகமா!

மயிலாடுதுறை மாவட்ட மக்களே! தரங்கம்பாடி சிறப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா? தரங்கம்பாடி முற்காலத்தில் முக்கிய துறைமுகமாக விளங்கியது. வங்கக் கடலின் கிழக்கு கடற்கரையோரத்தில், மயிலாடுதுறைக்கு தென்கிழக்கே 30 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அழகும் சிறப்பும், வியப்பும் கொண்ட இடமாகும். இது சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்கவேண்டிய இடமாகும். SHARE பண்ணுங்க!


