News June 25, 2024
மயிலாடுதுறை எம்பி ஆனார் சுதா

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சுதா இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சுதா, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Similar News
News April 6, 2026
மாயவரம்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

மாயவரம் மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News April 6, 2026
CM ஸ்டாலின் நாளை மாயவரம் வருகிறார்!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீர்காழியில் நாளை(ஏப்.7) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்ய உள்ளார். இக்கூட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளின் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
News April 6, 2026
மாயவரம்: வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். அதன்படி பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை பொது இடங்களில் நிறுத்தி செல்லும்போது, அதில் உள்ள பாதுகாப்பு அறைகளில் பைக் டேங்க் கவர்களில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வைத்து செல்ல வேண்டாம். அவற்றை மற்றவர்கள் திருடி செல்ல வாய்ப்புள்ளதால் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர்


