News November 4, 2025
மயிலாடுதுறை: உலக சாதனை படைத்த மாணவர்கள்

நடராஜபுரம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் யோகாசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளை சேர்ந்த 34 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வஜ்ராசனம், சிரசாசனம், ஹாலாசனம், பத்ம பத்மாசனம ஆகிய ஆசனங்களை அரை மணி நேரம் ஒரேநிலையில், அசையாமல் செய்து காட்டினர். இதையடுத்து இதனை யோகா வேர்ல்ட் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட் என்ற அமைப்பு இதனை உலக சாதனையாக அங்கீகரித்தது.
Similar News
News November 4, 2025
மயிலாடுதுறை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.<
News November 4, 2025
மயிலாடுதுறை: ஆய்வு செய்த கலெக்டர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறுபாதி ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஒன்றாக வாக்காளர்களுக்கு கணக்கிட்டு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலால் உதவி ஆணையர் மாணிக்கராஜ் உடன் இருந்தார்.
News November 4, 2025
மயிலாடுதுறை: ஒரே மாதத்தில் 180 கிலோ குட்கா பறிமுதல்

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையால் கடந்த அக்டோபர் மாதம் குட்கா பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் சுமார் 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்கில் தொடர்புடைய 43 பேர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 180 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


