News January 14, 2026
மயிலாடுதுறை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

தமிழக அரசு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் டெலிவரி தொழிலாளர்களுக்கு மின்சார இரு சக்கர வாகனம் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். மேலும் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். SHARE IT.
Similar News
News February 2, 2026
மயிலாடுதுறை: உங்களிடம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 2, 2026
மயிலாடுதுறை: தேசிய அளவிலான போட்டியில் வென்ற இளைஞர்

தேசிய அளவிலான மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள் கேரளாவில் அண்மையில் நடைபெற்றது. இந்த போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி வள்ளாலகரம் ஊராட்சியை சேர்ந்த குணசேகரன் என்பவர் கலந்து கொண்டார். இதில் தொடர் ஓட்டம் மற்றும் ட்ரிபிள் ஜம்பில் பங்கு பெற்று 3-ம் இடம் பிடித்து 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
News February 2, 2026
மயிலாடுதுறை மாவட்ட போலீசார் எச்சரிக்கை

மயிலாடுதுறை மக்கள் சமூக ஊடகங்களில் உங்கள் முகவரி அல்லது தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட விவரங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். அவற்றை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தி உங்களை கண்காணிப்பதற்காக பின் தொடர முடியும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


