News March 25, 2025
மயிலாடுதுறை : இலவச நுழைவுத் தேர்வு பயிற்சி

TAHDCO சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் ( JEE Mains) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. உணவு, தங்குமிடம் மற்றும் 11 மாதங்கள் பயிற்சிக்கான செலவை CPCL ஏற்கும் . இப்பயிற்சிக்கு www.tahdco.com இணையத்தில் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.
Similar News
News April 2, 2025
வைத்தீஸ்வரர் ஆலயம் சென்றால் முன்னேற்றம் உண்டு

மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில் எனும் ஊரில் வைத்தீஸ்வரன் ஆலயம் உள்ளது. இங்கு சென்று மூலவரான சிவனை வழிபட்டு, அங்குள்ள செவ்வமுத்துக்குமரர் சன்னதியில் உள்ள முருகனை வழிபட்டால், தொழில் தொடங்கி விரக்தியில் இருப்பவர்களின் கஸ்டங்கள் நீங்கும். மேலும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுமென நம்பப்படுகிறது. உடனே உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு SHARE செய்து அவர்களது முன்னேற்றத்திற்கு நீங்களும் உதவுங்கள்.
News April 2, 2025
மயிலாடுதுறையில் மழைக்கு வாய்ப்பு

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில், மயிலாடுதுறையில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 2, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

வேலை தேடும் இளைஞர்களை கவரும் வகையில் பகுதி நேர வேலை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து போலியான செய்திகள் ஆன்லைனில் உலவி வருகின்றன. அந்த செய்திகளை நம்பி யாருக்கும் பணம் அனுப்பி ஏமாந்து விடாதீர்கள் என மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளது. Share செய்யுங்கள்.