News January 1, 2026

மயிலாடுதுறை: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News January 3, 2026

மயிலாடுதுறை: 2025-ல் இத்தனை திருட்டா?

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2025) 98 திருட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் 8 வழக்குகள் பெருங்கொள்ளை குற்ற வழக்குகள் ஆகும். இந்த திருட்டு குற்ற வழக்குகள் தொடர்பாக 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், திருட்டுப்போன ரூ.81 லட்சத்து 82 ஆயிரம், மொத்த சொத்து மதிப்பில் ரூ.63 லட்சத்து 85 ஆயிரத்து 750 மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

News January 3, 2026

மயிலாடுதுறை: மின்தடை தற்காலிகமாக ஒத்திவைப்பு

image

மயிலாடுதுறை வட்டம் மணக்குடி துணை மின் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் மின்தடை செய்யப்படுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News January 3, 2026

மயிலாடுதுறை மக்களுக்கு எச்சரிக்கை!

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் சாலையை கடக்கும்போது கைபேசி பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ஒரு வழி பாதையில் எதிர்ப்புறமாக வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றம் எனவும் இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!