News February 18, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (பிப்.17) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 18, 2026
நூதன முறையில் மோசடி; காவல் துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களிக்க் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக தங்களுக்கு தெரிந்த நபர்களைப் போல் வீடியோ சித்தரித்து வீடியோ கால் மூலம் பணம் கேட்டால் பொதுமக்கள் அதை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News February 18, 2026
மயிலாடுதுறை மக்களே முற்றிலும் இலவசம், Don’t Miss It

மயிலாடுதுறை மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <
News February 18, 2026
மயிலாடுதுறை: கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை மாவட்டம் கிள்ளியூர் ராமன் கொட்டகம் பகுதியை சேர்ந்தவர் சித்திரன். இவரை கடந்த 2022ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக பிச்சைக்கண்ணு என்பவரின் குடும்பத்தினர் தாக்கியதில் உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், குற்றவாளிகள் பிச்சைக்கண்ணு மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.


