News October 22, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (அக்.21) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு சீர்காழி திருவெண்காடு குத்தாலம் செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று(அக்.21) இரவு 10 மணி முதல் இன்று(அக்.21) காலை 6 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
Similar News
News October 22, 2025
மயிலாடுதுறை: மழை கண்காணிப்பு அதிகாரி நியமனம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12 மாவட்டங்களுக்கு மழை கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் கவிதா ராமு இ.ஆ.ப கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
News October 22, 2025
மயிலாடுதுறை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வங்கக்கடலில் உருவாங்கியுள்ள புயல் சின்னத்தின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார். SHARE பண்ணுங்க!
News October 21, 2025
BREAKING: மயிலாடுதுறையில் நாளை விடுமுறை அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை அறிவிப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.