News December 26, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 30, 2025
மயிலாடுதுறை: பசு மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் பால் விலையை லிட்டருக்கு ரூபாய் 15 உயர்த்தி வழங்க கூறி நேற்று பசு மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
News December 30, 2025
மயிலாடுதுறை: 10-வது போதும்; போஸ்ட் ஆபிஸில் வேலை!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பு பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<
News December 30, 2025
மயிலாடுதுறை: ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு

மயிலாடுதுறை அடுத்த திருஇந்தளூரில் பிரசித்தி பெற்ற பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுள் இது 5-வது ஆலயமாகும். இதில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி ஒட்டி அதிகாலையில் திருஇந்தளுர் பரிமளரெங்கநாதர் ஆலய சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெருமாள் மங்களகிரி படிச்சட்டத்தில் எழுந்தருளினார்.


