News December 17, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.16) இரவு 10 மணி முதல் இன்று (டிச.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 20, 2025
மயிலாடுதுறை மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் ஒரு முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 1,172 km2
2. மொத்த மக்கள்தொகை: 9,17,000
3. சட்டமன்ற தொகுதிகள்: 03
4. பாராளுமன்ற தொகுதி: 01
5. வருவாய் வட்டங்கள்: 04
6. வருவாய் கோட்டங்கள்: 02
7. பேரூராட்சிகள்: 04
8. நகராட்சிகள்: 02
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் மற்றும் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளால் தவிக்கும் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘அன்பு கரங்கள்’ திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலகில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News December 20, 2025
மயிலாடுதுறை: இன்று இங்கெல்லாம் மின்தடை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையார் மற்றும் செம்பனார்கோயில் ஆகிய இரண்டு துணை மின் நிலையங்களில் இன்று (டிச.20) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காட்டுசேரி, ஆயப்பாடி, சாத்தனூர், சங்கரன்பந்தல், கிடாரங்கொண்டான், செம்பனார்கோயில், மேலபாதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


