News December 17, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (டிச.16) இரவு 10 மணி முதல் இன்று (டிச.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!

Similar News

News December 19, 2025

மயிலாடுதுறை: 1,264 வழக்குகளுக்கு தீர்வு

image

மயிலாடுதுறை கோர்ட்டில் மாவட்ட அமர்வு நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவர் நீதிபதி சுதா முன்னிலை வகித்தார். சிவில் வழக்குகள், குற்றவழக் குகள், மோட்டார் வாகன விபத்து கோரிக்கை தீர்ப்பாய வழக்குகள். குடும்பநல வழக்குகள் உட்பட 1,264 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் ரூ.1 கோடியே 40 லட்சம் தீருதவித்தொகையாக பெற்றுத்தரப்பட்டது.

News December 19, 2025

மயிலாடுதுறை: ஆர்ப்பாட்டம் செய்த எம்பி

image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் திட்டத்தில் மகாத்மா காந்தி அவர்களின் பெயரினை நீக்கம் செய்ததை மட்டும் இல்லாமல் அந்த திட்டத்தில் பல மாறுதலை கொண்டு வந்து மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர் சுதா கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

News December 19, 2025

மயிலாடுதுறை: மின்தடை அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் துணை மின் நிலையத்தில், நாளை(டிச.20) மாதந்திர பராமரிப்பு பணி காரணமாக, காட்டுசேரி, ஆயப்பாடி, சாத்தனூர் சங்கரன்பந்தல், தில்லையாடி, திருவிடைகழி, T.மணல்மேடு, கண்ணங்குடி, மாத்தூர், திருக்கடையூர், ஆணைகோயில், திருமெய்ஞானம், P.P.நல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!