News July 10, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட போலீசார் இன்று இரவு (ஜூலை 9) 11 மணி முதல் நாளை (ஜூலை 10) காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் காவல்துறை அதிகாரிகள் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள காவல் அதிகாரிகளின் நேரடி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News July 10, 2025
மயிலாடுதுறையில் முக்கிய ஊர்களின் முற்கால பெயர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் பல வரலாறுகளை கொண்டுள்ளது. அவ்வாறு உள்ள மாவட்டத்தின் முக்கிய ஊர்கள் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது என்பதை காண்போம். மயிலாடுதுறை – மாயவரம், செம்பனார்கோவில் – இந்திரபுரி, பூம்புகார் – காவிரிப்பூம்பட்டினம், சீர்காழி – பிரம்மபுரம், குத்தாலம் – திருத்துருத்தி, மணல்மேடு – நாகநாதபுரம், தரங்கம்பாடி – ட்ரான்கேபார் என அழைக்கப்பட்டது. தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News July 10, 2025
மயிலாடுதுறை காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள்

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.மாவட்ட எஸ்.பி . பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 14 புகார் மனுக்கள் மீது நேரடி விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார். காவல் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட 4 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தார்.
News July 9, 2025
மயிலாடுதுறையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் குறு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. கச்சேரி சாலையில் உள்ள யூனியன் கிளப்பில் நடைபெறும் இந்த முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. வேலை தேடும் இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.