News August 17, 2025
மயிலாடுதுறை: இப்படி ஒரு வரலாறு நிறைந்த இடமா?

பூம்புகார் கடலடி அருங்காட்சியகம் என்பது சீர்காழி வட்டம் பூம்புகார் பகுதியிலுள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் ஆகும். 1997ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் இந்தியாவிலுள்ள ஒரே கடலடி அருங்காட்சியகம் ஆகும். இங்கு ரோமானிய மற்றும் சீன பானை ஓடுகள், புத்தர் சிலை, சிலம்பு, அழகன்குளம் ஆய்வில் கண்டறியப்பட்ட முத்திரைப் பானை ஓடுகள் போன்றவை உள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News February 9, 2026
மயிலாடுதுறை: வெளிநாட்டு வேலை மோசடி.. உஷார்!

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பகுதி நேர வேலை வாய்ப்பு என, பொதுமக்கள் தங்களது அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இதன் மூலம் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அல்லது உங்களிடமிருந்து பணம் பறிக்க வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையுடன் இருக்கும் படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
News February 9, 2026
மயிலாடுதுறை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ளகக் குழு (பெண்கள் பாதுகாப்புக்கான அலுவலக குழு) அமைக்க வேண்டும். தவறும் நிறுவனங்களுக்கு பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013ன் படி ரூ. 50,000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு 04364212429 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
News February 9, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு. உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்


