News October 1, 2025
மயிலாடுதுறை : இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

மயிலாடுதுறை மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+91-9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இந்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News October 17, 2025
மயிலாடுதுறை: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். ‘044-49076326’ என்ற எண்னை தொடர்பு கொண்டு, உங்கள் டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் அனைத்தும் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க !
News October 17, 2025
மயிலாடுதுறை மாவட்ட மழை நிலவரம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மணல்மேடு குத்தாலம் செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று விட்டு விட்டு மழை பெய்தது. நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 36.40 மிமீ மழை பதிவாகியுள்ளது மயிலாடுதுறையில் 23.40 மிமீ, சீர்காழியில் 23.80 மிமீ செம்பனார் கோயிலில் 14.20 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
News October 17, 2025
மயிலாடுதுறை: கிராம உதவியாளர் வீட்டில் கொள்ளை

செம்பனார்கோயில் கருவிழந்தநாதபுரம் பகுதியை சேர்ந்த ராமநாதன்(70) கிராம உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது வீட்டின் முன்புறத்தில் ஹோட்டல் நடத்தி வருகின்றார். நேற்று முன்தினம் உணவகத்தை மூடி விட்டு வீட்டிற்கு சென்றபோது வீட்டில் பீரோ கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்து 8 பவுன் நகைகள் ரூ. 85 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது. ராமநாதன் அளித்த புகாரின்பேரில் செம்பனார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்