News September 19, 2025

மயிலாடுதுறை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

மயிலாடுதுறை மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News September 19, 2025

மயிலாடுதுறை: கடைசி தேதியை அறிவித்த கலெக்டர்

image

தீபாவளி பண்டிகை வருகிற 20.10. 2025 அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் நிபந்தனைகளின்படி வருகிற 10.10.2025குள் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பொது மக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News September 19, 2025

மயிலாடுதுறையில் பெய்த மழையின் அளவு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு, சீர்காழி, தரங்கம்பாடி, கொள்ளிடம், உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 75 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தரங்கம்பாடியில் 67.60 மிமீ, செம்பனார்கோவிலில் 61.மிமீ சீர்காழியில் 42.மிமீ மழை பொழிந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 19, 2025

மயிலாடுதுறை: மாணவி கொடுத்த அதிர்ச்சி புகார், சிக்கிய இளைஞர்!

image

மயிலாடுதுறையில் உள்ள பிரவுசிங் சென்டரில் கல்லூரி மாணவி பாஸ்போர்ட் பதிவு செய்ய சென்றபோது, ஊழியர் ஒருவர் பாஸ்போர்ட் பதிவு செய்ய மாணவியின் செல்போனில் ஏர்ட்ராய்டு பேரண்டல் கண்ட்ரோல் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து தந்துள்ளார். இந்த செயலி மூலம் மாணவியின் செயல்பாடுகளை கேமரா மற்றும் திரை மூலம் கண்காணித்துள்ளார். மாணவி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அப்ரித் (28) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!