News May 1, 2024
மயிலாடுதுறை அருகே விபத்து; இருவர் படுகாயம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரடி பகுதியில் இன்று கும்பகோணத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்து எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது மோதியதில் ஒருவருக்கு தலையில் படுகாயமும் மற்றவருக்கு இரண்டு கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Similar News
News November 28, 2025
மயிலாடுதுறை: மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு பொதுமக்கள் உங்கள் மொபைல் போனுக்கு வந்துள்ள ஓடிபி எண்ணை யாராவது தொடர்பு கொண்டு கேட்டால் யாரிடமும் ஓடிபி எண்ணை பகிர வேண்டாம். இதன் மூலம் சைபர் குற்றவாளிகள் தங்களை ஏமாற்ற வாய்ப்பு உள்ளதாக மாவட்ட காவல்துறை பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
News November 28, 2025
மயிலாடுதுறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

மயிலாடுதுறை கடற்கரை பகுதிகளில், இன்று (28.11.2025) 2.7 மீட்டர் முதல், 3.3 மீட்டர் உயரத்தில் அலைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மற்றும் கடலோர குடியிருப்போர் கடல் மற்றும் கரையோர செயல்பாடுகளை தவிர்க்குமாறு, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.