News July 6, 2025
மயிலாடுதுறை அருகே வாலிபருக்கு நன்னடத்தை சான்றிதழ்

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கள்ளிக்காட்டை சேர்ந்த இளைஞர் விக்னேஷ் என்பவர் காதல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் விக்னேஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் நீதிமன்ற ஜாமினில் சிறையிலிருந்து வெளியே வந்த விக்னேஷ் மீது எஸ்பி அறிவுறுத்தலின்பேரில் நிர்வாக நடுவர் மயிலாடுதுறை கோட்டாட்சியர் முன்னிலையில் நன்னடத்தை சான்றிதழ் பிறப்பிக்கப்பட்டது.
Similar News
News July 6, 2025
மயிலாடுதுறை: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை

IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் உள்ள IT Officer (203), Marketing Officer (350) உட்பட (1007) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இங்கே<
News July 6, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல் போன ரயில் சேவை

மயிலாடுதுறை-தரங்கம்பாடி மீட்டர் கேஜ் ரயில் பாதை பிரிட்டிஷ் அரசால் 1926 இல் திறக்கப்பட்டது, இது 36 கிமீ (22 மைல்) நீளம் கொண்டது. இப்பாதை செம்பனார்கோயில், திருக்கடையூர், பொறையார் வழியாக சென்று வந்த இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் பயன்பெற்று வந்தனர். ஆனால் வருவாய் குறைவின் காரணமாக 1986ஆம் ஆண்டு முதல் இந்த சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தெரியாதவர்களுக்கு ஷேர் செய்து இதனை தெரியப்படுத்துங்கள்
News July 5, 2025
ஊட்டச்சத்து இயக்கத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

வேளாண்மை துறை மூலம் ஊட்டச்சத்து இயக்கத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். துவரை தட்டை பயறு வகை விதைகள் 1500 பேருக்கும் தக்காளி, கத்திரி, உள்ளிட்ட காய் விதை தொகுப்பு 20 ஆயிரம் பேருக்கும் பப்பாளி, கொய்யா, போன்ற பழ செடிகள் 11,750 பேருக்கும் 100% மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இதற்கு tnhorticulture.tn.gov.in/kit/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.